பாதுகாப்புக் குழுக்கூட்டம் நம்பிக்கைக்குரியதாக இல்லை : ஜனாதிபதி

தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான, பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு, இன்று ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய சஹரான் குறித்தும், இவ்வாறான ஒரு தாக்குதல் திட்டம் இருப்பது தெரிந்தும், பொலிஸ்மா அதிபரோ, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவோ, என்னிடம் எதனையும் தெரிவிக்கவில்லை.

அநாவசியமான விடயங்கள் குறித்து என்னிடம் பேசிய நபர்கள், அவசியமான விடயத்தை மறைத்துள்ளனர் என, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாதுகாப்பு குழுக்கூட்டம் நம்பிக்கைக்குரிய இடமாக கருதவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஆராய்ந்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து, அவரது வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டனர்.

இன்று காலை 10.00 மணிக்கு, ஜனாதிபதி செயலகத்தில் தெரிவுக்குழு தமது விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்ற இந்த விசாரணைகளின் போது, பல்வேறு காரணிகள் ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டுள்ளது.

இன்றையதினம், தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி மற்றும் உறுப்பினர்கள் ஊடகங்கள் இல்லாது இந்த வாக்குமூலத்தை பெற்றுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!