ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது, மக்களின் கடமை : ஹரிசன்

ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது எனக்கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகள், அதனை நிறைவேற்றவில்லை என, மீன்பிடி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

இன்று, கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட மீன்பிடி அமைச்சர் பி.ஹரிசன், அஸ்கிரிய மகாநாயக்கர் வறக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர், மற்றும் மல்வத்துப்பீட மகாநாயக்கர் திட்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் பி.ஹரிசன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் கருமத்தை, அனைத்துக் கட்சிகளும் இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமல்ல, இந்த நாட்டில் ஜே.ஆர்.ஜயவர்தனவுக்குப் பின்னர் ஆட்சிபீடத்திற்கு வந்த அத்தனை ஜனாதிபதிகளும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்போம் என்றே பதவிக்கு வந்தனர்.

அதன்படி சந்திரிகா குமாரதுங்க அம்மையார், மஹிந்த ராஜபக்ச, டி.பி.விஜேதுங்க அதேபோல மைத்ரிபால சிறிசேன ஆகியோர் ஆட்சிக்கு வரும் போது, பிரதான வாக்குறுதியாக தொனிப்பொருளாக நிறைவேற்று அதிகார முறையை நீக்குவதாக காணப்பட்டது.

அதனால் 19 ஆவது திருத்தத்தை கொண்டுவந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அதன் அதிகாரங்கள் சிலவற்றை நீக்கினார்.

ஆனால் முழுமையாக அதனை நீக்க வேண்டும் என்பதால்தான், அதற்கான யோசனைகூட பேசுபொருளாகிவிட்டது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதாயின், அதற்காக கோடிக்கணக்கான பணம் அவசியமாகாது.

அனைத்துக் கட்சிகளும் இணைந்து பேச்சு நடத்தி, அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்திலும் பேச்சு நடத்தி செய்ய முடியுமாக இருந்தால் சிறந்தது.

இல்லாவிட்டால் இன்றுபோய் நாளை வா என்றதைப் போலாகிவிடும் இந்த நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை.
ஆட்சிக்குவந்த அனைத்து ஜனாதிபதிகளும் அதனையே செய்தனர். அதனால் இது சிறந்த முடிவு.

கடந்த தேர்தலிலும் ஜனாதிபதி முறையை நீக்குவோம் என்றே வாக்குறுதி அளித்திருந்தோம். அதனை முழுமையாக நீக்குவது குறித்து, ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனித்து முடிவு செய்ய முடியாது.

பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டு, மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு, நீதிமன்றம் சென்று அதற்குப் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, இப்படி மிகப்பெரிய கருமம் இருக்கின்றது.

அதனால் இந்த முறையை நீக்குவதற்கு எமது கட்சி முழுமையான ஆதரவை அறிவித்திருக்கிறது.
அதனால் அமைச்சரவையில் பேச்சு மட்டுமே நடத்தப்பட்டது.

அதனை முழுமைப்படுத்துவது பாராளுமன்றம், நீதிமன்றம் மற்றும் மக்கள் மன்றத்தின் கடமையாகும்’
என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!