கிழக்கு பல்கலை, கல்விசாரா ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

சம்பள முரண்பாடுகள், ஊழியர் நலன்கள் தொடர்பில் உரிய தீர்வை வழங்கும் வரை, தென் கிழக்குப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், தொடர் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்து, இன்று பதினொறாவது நாளில் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

பல்கலைக்கழகப் பிரதான நுளைவாயிலிருந்து ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணயில், அதிகளவிலான ஆண் பெண் ஊழியர்கள் கலந்துகொண்டு, வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு, அக்கரைப்பற்று, கல்முனை பிரதான வீதி வரை பேரணியாகவும் சென்றனர்.

அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்க சம்மேளனம், பல்கலைக்கழகங்களின் கூட்டுக்குழுவும் இணைந்து, தங்களது ஊழியர்களுக்கு பெற்றுக்கொடுக்கக் கூடிய நலன்கள் தொடர்பில் ஏற்பாடு செய்த தொழில் சங்க நடவடிக்கையின் பொருட்டு, தென் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இணைந்து, இந்தப் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக, சங்கத்தின் தலைவர் எம்.எம்.நௌபார் தெரிவித்தார்.

கல்வி சாரா ஊழியர்களை நேரடியாக பாதித்துள்ள ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு நடைமுறையைச் சரியானதாகத் தயாரித்துக் கொள்ளல், ஊழியர் எண்ணிக்கை அறிக்கையைச் சரியானதாகத் தயாரித்துக் கொள்ளல் போன்ற 11 முக்கிய கோரிக்கைகளினை முன்வைத்து உரிய தீர்வை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேற்படி கோரிக்கைகள் குறித்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்கு ஜனாதிபதி, பிரதமர், உயர்கல்வி அமைச்சர் உட்பட உயர் மட்டங்களுக்கிடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வி கண்ட நிலையில், எமது பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்தாக மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சம்பள முரண்பாட்டினை நீக்கக்கோரி கிழக்குப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய ஊழியர்கள், தமது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டதுடன், அங்கிருந்து பிரதான வீதிவழியாக இரண்டு கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து செங்கலடி முச்சந்தியை அடைந்தனர்.

அங்கும் கோஷமிட்டு மீண்டும் பல்கலைக்கழகத்திற்குச் சென்றதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாதைகளை ஏந்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!