இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க தீர்வு : ஹரிசன்

இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் அத்துமீறல்களை தடுப்பதற்காக, இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி சிறந்த தீர்வைப் பெற்றிருப்பதாக, மீன்பிடி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

இன்று, கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட மீன்பிடி அமைச்சர் பி.ஹரிசன், அஸ்கிரிய மகாநாயக்கர் வறக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட பின்னர், இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்திய மீனவர்களினால் தான், அதிகளவாக எமது கடற்பரப்பில் அத்துமீறல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இப்போது இதனை தடுப்பதற்காக, இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி, சிறந்ததொரு தீர்வைப் பெற்று, இருநாட்டு மீனவர்களும், ஒத்துழைப்புடன் மீன்பிடித் தொழிற்துறையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றோம்’ என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!