கிளிநொச்சியில், தர்ம முழக்கம் கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஆரம்பித்துள்ளது!

கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரிக்கும், கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கும் இடையிலான, தர்ம முழக்கம் என அழைக்கப்படும், கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி, 5 ஆவது தடவையான இன்று ஆரம்பமானது.

தர்மபுரம் மத்திய கல்லூரி மைதானத்தில், இன்று காலை ஆரம்பமான போட்டியில், இரு அணிகளும் பல பரீட்சையில் ஈடுபட்டன.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தர்மபுரம் மத்திய கல்லூரி அணி, களத்தடுப்பை தெரிவு செய்தது. கடந்த ஐந்து வருடத்திற்கு முன்னர், செல்வி ஜீவராஜா விதுசா என்ற மாணவியின் தனியாள் செயற்திட்டத்திற்காக, குறித்த மாணவியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தர்ம முழக்கம் கிரிக்கெட் போட்டி, ஐந்தாவது முறையாக இன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப நிகழ்வில், இரண்டு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மற்றும் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர், தர்மபுரம் கல்லாறு வட்டார பிரதேச சபை உறுப்பினர், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கிரிக்கெட் போட்டியின் இறுதி நிகழ்வு, நாளை இடம்பெறவுள்ளதாக, ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!