யாழில், பிரபல பாடசாலை அதிபர் கைது

யாழ்ப்பாண மாவட்டத்தில், இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் சதாநிமலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால், அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், உரிய ஆதாரங்களுடன் இன்று நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு, ஆணைக்குழு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மாணவர் அனுமதிக்கு 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட நிலையில், உரிய ஆதாரங்களுடன் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், அதிபர் கைது செய்யப்பட்டமையை, வடக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!