2020 சர்வதேச கலைஞர் மாநாடு தொடர்பான கலந்துரையாடல் நாளை!

அகில உலக கலைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில் 2020ஆம் ஆண்டு நடாத்தப்படவுள்ள சர்வதேச கலைஞர் மாநாடு தொடர்பான கலந்துரையாடல் நாளை நடைபெறவுள்ளது.

நாளை பிற்பகல் 02.30 மணிக்கு யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் சிவன் கோவிலுக்கு முன்பாக உள்ள சங்கிலியன் மன்றத்தில் அகில உலகக் கலைஞர் சங்கத்தின் தலைவர் பொன்.சுகந்தன் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

கலந்துரயாடலில் அனைத்து தமிழ் கலைஞர்களையும், அறிஞர்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு அகில உலக கலைஞர் சங்கத்தின் தலைவர் பொன்.சுகந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!