வவுனியா செட்டிக்குளத்தில், யானையின் சடலம் மீட்பு!

வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரவிற்குட்பட்ட முகத்தான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில், யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள முகத்தான் குளத்திற்கு அருகாமையில் கடந்த இரண்டு நாட்களிற்கு முன்பாக யானையின் சடலம் ஒன்றினை அவதானித்த பொது மக்கள், வனயீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வனயீவராசிகள் திணைக்களத்தினர் யானையின் சடலத்தினை பார்வையிட்டதுடன், யானை இறந்தமைக்கான காரணத்தை அறியும் முகமாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!