சாமிமலை கொழும்பு தோட்டம் தொடர் குடியிருப்பில் தீ

நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா ஸ்டோக்கம் கொழும்பு தோட்டத்தில் தொழிலாளர் தொடர்குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீயினால் அக்குடியிருப்பில் இருந்து 16 வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று காலை ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தினால் உயிராபத்துக்களோ, காயங்களோ ஏற்படாத போதிலும் ஆறு வீடுகள் முற்றாகவும், 10 வீடுகள் பகுதியளிவிலும் சேதமடைந்துள்ளன.

குறித்த வீடுகளில் சுமார் 30 குடும்பங்கள் வாழ்ந்ததாகவும் இதில் 16 வீடுகளில் வாழ்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்த அத்தியவசிய அவணங்கள் , உடுபுடவைகள் தளபாடங்கள் பெறுமதிமிக்க நகைகள் போன்றன தீக்கிரையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!