தனது செயலகத்தில் சாட்சியங்களை வழங்கும் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவினர் இன்று காலை ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்னர்.

மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சற்று முன்னர் தனது சாட்சியங்களை வழங்குவதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இன்றிய தினம் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பெற்றுக்கொள்ளும் வாக்குமூலத்தின் பின்னர் அறிக்கையை முழுமைப்படுத்தி பாராளுமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் (ஒக்டோபர் ) 31 ஆம் திகதி வரையில் தெரிவுக்குழு இயங்குவதற்கான கால எல்லை பாராளுமன்ற அங்கீகாரத்துடன் நீட்டிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!