ஜனாதிபதி தேர்தலுக்கு மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்ததை தொடர்ந்து, அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத் தாக்கல் ஒக்டோபர் 7ஆம் திகதி காலை 9 மணி முதல் 11 மணி வரையான காலப் பகுதியில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், வேட்பாளர் கட்டுப்பணம் செலுத்தும் தினம் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை இது கையேற்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று 3 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2 சுயாதீன வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர் ஒருவரும், தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜயந்த கெட்டகொட, சிறிபால அமரசிங்க ஆகியோர் சுயாதீன வேட்பாளர்களாகவும், இலங்கை சோசலிச கட்சி சார்பில் அஜந்தா பெரேராவும் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!