தெரிவுக்குழுவில் ஜனாதிபதி இன்று சாட்சியம்!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 10.00 மணிக்கு சாட்சியமளிக்க உள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் விசேட அறை ஒன்றில் தெரிவுக்குழு உறுப்பினர்களால் ஜனாதிபதியின் சாட்சியம் பதியப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பலர் ஜனாதிபதியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளதால் தெரிவுக்குழு அது பற்றி அவரிடம் இன்று வினவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!