வத்தளையில் ஆடையகம் ஒன்றில் தீ!

வத்தளை – ஹேகித்தைப் பகுதியில் உள்ள பிரபல ஆடையகம் ஒன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த தீ விபத்து இன்று காலை 7 மணியவில் ஏற்பட்டிருக்கலாம் என்றும், தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயினால் ஆடையத்தில் இருந்த பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

சம்பவ இடத்தில் 5 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

தீ விபத்தை அடுத்து குறித்த பகுதியில் சில போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!