மட்டு, வாழைச்சேனையில் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெட்டை வயல் பிரதேசத்தில், இன்று மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மீராவோடையைச் சேர்ந்த 40 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான அச்சு முகம்மது ரம்ழான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தற்போது பெரும் போக வேளான்மை செய்கைக்கான ஆரம்ப வேலைகள் இப்பிரதேசத்தில் நடைபெறுவதனால் தமது வயலில் உழவு வேலையில் ஈடுபட்ட உழவு இயந்திர சாரதிக்கு உணவு வழங்க சென்ற போது இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தற்போது சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றமை குறிப்பிடதக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!