அச்சுறுத்தலுக்குள்ளாகும் இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் – ஐ.நா செயலாளர் கவலை

இலங்கையின், மனித உரிமை பணியாளர்கள், ஆர்வலர்கள், துன்புறுத்தல்களுக்கு உள்ளாவது குறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்துள்ள புதிய அறிக்கையில், இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகலம் தெரிவித்துள்ளது.

மனித உரிமை பேரவையின் அமர்வுகளில் பங்கேற்ற பின்னர் இலங்கை திரும்பியவர்கள், அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.

மனித உரிமை பேரவையின் அமர்வுகள் மற்றும் பக்க நிகழ்வுகளின் போது, பல குழுக்கள் மரண அச்சுறுத்தலை விடுப்பதாகவும் அறிக்கைகள் கிடைத்துள்ளன.

2018 ஆகஸ்ட் 2 ஆம் திகதி, விசேட அறிக்கையாளர்கள், காணாமல் போன தனது கணவரை தேடி கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சந்தியா எக்னலிகொட, இணையம் மூலமும் ஏனைய வழிகளிலும் அச்சுறுத்தப்படுவது குறித்து சுட்டிக்காட்டியிருந்தனர்.

மனித உரிமை பேரவையின் அமர்வில் பங்கேற்றமை தொடர்பில், சிவில் சமூக பிரதிநிதிகள் தாங்கள் கண்காணிக்கப்படுகின்றனர். அத்துடன், அவர்களுக்கு கொலைமிரட்டல்கள் உட்பட அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றது. என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!