சீன பிரதிநிதி – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள, சீன கம்யுனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான சென் மின்னெருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது, இரு நாட்டுத் தொடர்புகள் மற்றும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

60 ஆண்டு காலமாக, சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, யுத்த காலத்தில் சீனா இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பை இலங்கை ஒருபோதும் மறவாது என்றும் தெரிவித்தார்.

ஆதிகாலம் முதல் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகளை நினைவூட்டிய சீன பிரதிநிதி, இரு நாடுகளுக்கும் இடையே தூதரக தொடர்புகள் ஆரம்பிப்பதற்கு முன்னர், அதாவது 1950 அளவில் இறப்பர் மற்றும் அரிசி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டதன் ஊடாக, சிறந்த நட்பு நாடு என்ற வகையில், இலங்கை சீனாவுக்குச் சர்வதேச அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையில் ‘ஒரே சீனா’ கொள்கையினூடாக தனது நாட்டுக்குச் சர்வதேச ரீதியில் வழங்கப்பட்ட ஒத்துழைப்பையும் நினைவுகூர்ந்தார்.

வறுமையை ஒழிக்கும் நிபுணராகப் பிரசித்தி பெற்ற சென் மின்னெர், சீனாவின் வறுமையை ஒழிப்பதற்கு முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், வறுமையில் வாடும் கிராமிய மக்களை வலுவூட்டுவதன் ஊடாக வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டங்கள் வெற்றியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் சீன ஜனாதிபதி ஜின்பிங், அதிகாரிகளுக்கு இலக்குகளை வழங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதனால் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்வதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், சீன கம்யுனிஸ்ட் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையிலான உறவுகளை வலுவூட்டுவதன் தேவையை, ஜனாதிபதி வலியுறுத்தினார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!