யாழ், விவசாயக் கண்காட்சி நீடிப்பு!

யாழ்ப்பாணம் – பலாலி வீதியில், திருநெல்வேலியில் அமைந்துள்ள, மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிலையம் என்பன இணைந்த வளாகத்தில் இடம்பெற்று வரும் விவசாயக் கண்காட்சி, ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமான கண்காட்சியை, நாளை வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பலரின் வேண்டுகோளுக்கு இணங்க, 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறீரங்கன் அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில், நாளை நிறைவடைய இருந்த கண்காட்சி, நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளதுடன், அன்றையதினமும் மக்கள் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!