இந்திய மீனவர்கள் 5 பேர் விளக்கமறியலில்!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, இந்திய மீனவர்கள் 5 பேரையும், எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து, ஒரு விசைப் படகுடன் இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் 5 பேர், நேற்று மாலை காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அதன் பின்னர், காங்கேசன்துறை கடற்படை தளத்தில் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மீனவர்களுக்கு எதிராக, சட்டவிரோத மீன்பிடி குற்றச்சாட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!