ஊடகவியலாளர் தவசீலனுக்கு பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் அழைப்பு

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனை, விசாரணை ஒன்றில் முன்னிலையாகுமாறு, பொலிஸ் திணைக்கள பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

அந்த அழைப்புக் கடிதத்தில், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில், தங்களின் வாக்குமூலம் ஒன்று அவசியம் தேவைப்படுவதனால், எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு, கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு 2 ஆம் மாடி புதிய செயலக கட்டடத்திற்கு வருகை தருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – பனிக்கன்குளம் – மாங்குளம் என்ற முகவரியில் அமைந்துள்ள, ஊடகவியலாளரின் வீட்டிற்கு நேரடியாக சென்ற பொலிஸார், விசாரணைக்கான அழைப்பு கடிதத்தை கையளித்துள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!