முல்லை. வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், கொட்டும் மழைக்கு மத்தியிலும், மாவட்ட செயலகம் முன்பாக, உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பட்டதாரிகள் நியமனத்தின் போது, தங்களுடைய நியமனங்கள் புறக்கணிக்கப்பட்டதாக, இதுவரை வேலை வாய்ப்புகள் கிடைக்காதவர்களும் வெளிவாரிப்பட்டங்களை பெற்ற சிலரும் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்திற்கான நிரந்தர தீர்வு, 48 மணி நேரத்திற்குள் கிடைக்காத பட்சத்தில், தீக்குளிப்போம் என்ற பதாகைகளை தாங்கியவாறு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது, வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆதரவாக, வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், திருச்செல்வம் இரவீந்திரன், இரத்தினம் ஜெகதீஸ்வரன், அண்டனி ரங்கதுசார, காமினி திசாநாயக்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இணைந்து கொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!