வட்டவளை ரயில் தண்டவாளத்தில் உறங்கிய நபருக்கு நேர்ந்த கதி !

நுவரெலியா வட்டவளை பகுதியில், புகையிரத வீதியில் நித்திரையில் இருந்த நபர், புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளார்.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த, உடரட்ட மெனிக்க என்ற புகையிரதம், இன்று மதியம் 12.00 மணியளவில் மோதியதில் உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக, வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதில், 50 வயதுடைய நபர் உயிரிழந்துள்ள நிலையில், எந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் கானப்படவில்லை என, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!