இந்திய முறையிலான அரசியலமைப்பே இனப்பிர்சினைக்கு தீர்வு : சங்கரி

விலை போகாத வைரமாக இருக்கும் தன்மீது, வீண்பழி சுமத்தப்பட்டு வருவதாகவும், தேர்தலில் மக்களை பணம் கொடுத்து வாங்க முடியாது எனவும், இந்திய அரசியல் அமைப்பை ஏற்று அதை எம் மக்களுக்கு எந்த கட்சி நடைமுறைப்படுத்துவோம் என கூறுகிறதோ, அந்த கட்சிக்கே எமது ஆதரவு எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கித்தான் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றால், அது நடைபெறும் காரியம் அல்ல. ஏகமனதாக எத்தனை அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டதென்றால் ஒன்றும் இல்லை. இனப் பிரச்சினைக்கும் எந்த தீர்வும் இல்லை.

எழுக தமிழ் பேரணியில் முதலாவதாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை சமஸ்டி, ஆனால் அது எல்லோராலும் கைவிடப்பட்டது. 2004 தேர்தலின் போது ரணில் சமஸ்டியை முன்வைத்தார். ஆனால் சம்மந்தனின் கூட்டம் ஊர் ஊராக சென்று வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவேண்டாம் என பிரச்சாரம் செய்தது.

சமஸ்டி கோரிக்கை முன்வைத்த போது அதை எதிர்ப்பது போல செயற்பட்டு விட்டு, இப்போது எடுத்ததற்கு எல்லாம், சமஸ்டி பற்றி பேசுவது, அர்த்தம் அற்ற பேச்சு.

சமஸ்டி கொள்கையை முன்வைத்த போது, அதை எதிர்த்த போதே, சமஸ்டியைப் பற்றி பேசும் உரிமையை தமிழ் தேசிய கூட்டமைப்பு இழந்து விட்டது.

எமக்கான பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றால், இந்திய முறையிலான தீர்வைத்தான் முன்வைக்க வேண்டும்.

ஐ.தே.க அரசாங்கம் தோற்கும் கட்டம் வரும். ஆனால் தோற்கும் தறுவாயில், ஏதாவது செய்து, ரணில் ஏதாவது செய்து கூட்டமைப்பை வாங்கிவிடுவார்.

4 வருடங்கள் சென்ற பின், மேலும் ஒரு வருடம் தாருங்கள் என ரணில் கூறுவது அர்த்தமற்ற பேச்சு.சஜித் பிரேமதாசவோ ரணிலோ, மக்களை முட்டாள்கள் என நினைத்தே செயற்படுகிறார்கள்.

25 மாவட்டங்களிலும் புத்தர் சிலை அமைப்பேன் என கூறும் சஜித் பிரேமதாசவிற்கு, தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கும் உரிமை கிடையாது. இந்திய அரசியல் சட்டம் போல், இலங்கையில் நாமும் ஆளப்படுவோம் என எந்த அரசில் கட்சியாவது தெரிவித்தால், நிச்சயமாக இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண முடியும்.

எழுக தமிழ் இன்று வெறும் கேலிக்கூத்தாகி விட்டது. இந்தியா கடந்து சுவிஸ் வரை சென்று எழுக தமிழை சாதனை போல காட்டினார்கள். ஆனால் அது சாதனை அல்ல படு தோல்வி.

எத்தனை தடவை கூறினாலும், கூட்;டமைப்பு ஒரு பெய்யான கட்சி என யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.சரத் பொன்சேகா விடுதலைப்புலிகளை அழிப்பேன் என கூறிவந்தார். 2009 யுத்த முடிவின் பின் இராணுவம் இரட்டிப்பாக்கப்படும் எனவும் கூறினார். ஆனால் அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள், இந்த சம்பந்தன் கூட்டத்தோர்.

விடுதலைப்புலிகளின் பெயரைக் கூறி பாராளுமன்றம் சென்ற 22 பேரும், விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு காரணமாக இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை. கூட்டமைப்பில் இருப்பவர்கள் பதவி விலகுங்கள். உங்களுக்கு இந்த அந்தஸ்த்ததை தந்தவர்களையே நீங்கள் அழித்துவிட்டீர்கள்.

ஜனாதிபதி தேர்தலில் எமது இந்திய முறைமை ஆலோசனையை ஏற்பவர்களுக்கே எமது ஆதரவு வழங்கப்படும். 40, 50 கோடி பையில் உள்ளது. இலகுவாக வெல்லலாம் என அரசியல்வாதிகள் நினைக்கலாம். ஆனால் இனிமோல் மக்களை காசு கொடுத்து வாங்க முடியாது. என தெரிவித்தள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!