தியாகி திலீபனின் நினைவு தூபியை புனரமைக்க தீர்மானம்!

தியாக தீபம் திலீபன் நினைவு தூபி புனரமைப்பதற்கான தீர்மானம் யாழ்ப்பாணம் மாநகரசபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது, யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வின் ஒத்திவைப்பு அமர்வு இன்று இடம்பெற்றது.

கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற மாநகர சபையின் இந்த மாதத்திற்கான மாதாந்த அமர்வு இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அமர்வின் ஒத்திவைப்பு அமர்வு யாழ் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்த அமர்வில் தியாக தீபம் திலீபனுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு சபை நடவடிக்கை ஆரம்பமானது.
அமர்பில் தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியை புனரமைப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய தியாக தீபம் திலீபனின் 32 ஆவது நினைவுதினம் நிறைவடைந்ததும், நினைவு தூபியின் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!