பொகவந்தலாவையில், இந்து ஆலயங்களில் திருடர்கள் கைவரிசை!

நுவரெலியா பொகவந்தலாவ ரொப்கில் வானகாடு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், டிக்கோயா சாஞ்சிமலை இராமர் ஆலயம் மற்றும் டிக்கோயா பொயிஸ்டன் தோட்டபகுதிகளில் உள்ள ஆலயங்களில் நேற்றிரவு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

குறித்த ஆலயங்களை உடைத்து, உள்நுழைந்த திருடர்கள், ஆலயங்களில் இருந்த உண்டியல் மற்றும் தங்க ஆபரணங்களையும் திருடிச் சென்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று அதிகாலை 1 மணி தொடக்கம் 4 மணி வரையான காலப்பகுதிக்குள் குறித்த திருட்டுச் சம்பங்கள் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை பொகவந்தலாவ வானகாடு தோட்டபகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றும் உடைக்கபட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தச் திருட்டுச் சம்பங்கள் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், குறித்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டிவி காணொளிகள் பொலிஸாரினால் மீள் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் திருட்டுச் சம்பவங்கள் குறித்து பொகவந்தலாவ மற்றும் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!