யாழ்.அரியாலையில் வெடி பொருட்கள்!

யாழ்ப்பாணம் அரியாலை அருளம்பலம் வீதியில் பழைய கிரனைட் மற்றும் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அந்தப்பகுதியில் உள்ள பழைய வீடொன்றை வீட்டு உரிமையாளர்கள் துப்பரவு செய்யும் போது, கிணற்றிற்குள் இருந்து கிரனைட் மற்றும் இரண்டு மிதிவெடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வெடிபொருட்கள் எடுக்கப்பட்டமை தொடர்பில் வீட்டு உரிமையாளரால் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த வழங்கிய தகவலின் அடிப்படையில், மேலும், வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற அச்சத்தில், பொலிஸாரால் துப்பரவு பணிகள் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெடிபொருட்கள் தொடர்பில் பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றின் அனுமதியை பொலிஸார் பெறவுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!