யாழ், சாவகச்சேரியல் விபத்து : வயோதிப பெண் படுகாயம்!

யாழ்ப்பாணம், தென்மராட்சி – சாவகச்சேரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில், வயோதிப பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பட்டா ரக வாகனம் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர் சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியை சேர்ந்த 65 வயதுடைய குமாரசாமி நாகரத்தினம் என அடையாளம் காணப்பட்டுள்ளார், இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!