ஆசிரியர்களில் 10 வீதமானவர்கள் சேவைக்கு தகுதியற்றவர்கள் – ஜனாதிபதி!

நாட்டில் ஆசிரியர் சேவையிலுள்ள சுமார் 2 இலட்சத்து 80 ஆயிரம் பேரில் சுமார் 10 வீதமானவர்கள் ஆசிரியர் சேவைக்கு பொருத்தமற்றவர்கள் என்பது கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்றில் தெரிய வந்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, பரீட்சை சான்றிதழ்களை கொண்டிருந்த போதிலும் ஆசிரியர் தொழிலுக்கு தேவையான தரத்தை அவர்கள் கொண்டிருக்காமையே அதற்கு காரணமாகும் என குறிப்பிட்டார்.

தற்கால ஆசிரியர்கள் சிறந்த ஆக்கத்திறனைக் கொண்டவர்களாகவும் ஆளுமையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நேற்று முற்பகல் குருணாகல் வெலகெதர விளையாட்டரங்கில் இடம்பெற்ற வடமேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

கல்விப் போதனைகளுடன் மட்டும் ஆசிரியர்களின் பணி முடிந்துவிடாது என்றும் பாடசாலை மாணவர்கள் குறித்த பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் பிள்ளைகள் நவீன தொழிநுட்பத்துடன் முன்நோக்கி செல்கின்றபோது வகுப்பறையின் சவால்களுக்கும் வெற்றிகரமாக முகங்கொடுக்கக்கூடிய வகையில் ஆசிரியரின் அறிவு இற்றைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் எனவும்; ஜனாதிபதி குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!