வவுனியா – உக்கிளாங்குளத்தில் சீரடி சாயியின் அதிசயம்!

வவுனியா – உக்குளாங்குளத்தில் சீரடி சாய்பாபாவின் ஒளிப்படத்திலிருந்து திருநீறு கொட்டுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அந்த காட்சியை காண பாபா பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.

உக்குளாங்குளம் குட்டிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் வழிபடப்பட்டு வந்த சீரடி சாய்பாபாவின் ஒளிப்படத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை முதல் திருநீறு கொட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த வீட்டிற்கு நேற்று காலையில் ஊடகவியலாளர்கள் சென்றபோது அங்கிருந்த சீரடி பாபாவின் பல ஒளிப்படங்களில் திருநீறு வீசப்பட்டது போன்று காட்சியளித்ததுடன், படத்தின் கீழும் திருநீறு காணப்பட்டிருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த வீட்டு உரிமையாளர், தான் 10 வருடங்களாக பாபாவை வணங்கி வருவதாகவும் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் தனது மகளின் வீட்டிலும் இவ்வாறு அதிசயம் இடம்பெற்ற நிலையில் தற்போது தனது வீட்டிலும் அதிசயம் இடம்பெறுவதாக தெரிவித்தார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!