ஜ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜக்கிதேசியக் கட்சியின் வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் செயலகம் நேற்;று அறிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்றிரவு ஜக்கிய தேசியக் கட்சியினர் அலரிமாளிகையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தியுள்ளனர். இதன்போது ஜக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஜக்கியதேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, குறித்த கலந்துரையாடலின் இறுதியில் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் வாரம் அறிவிக்கப்படுவார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் பிரதமர், ஜக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகில விராஜ் காரிய வசத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!