த.தே.கூட்டமைப்பின் ஆதரவு சஜித்திந்கே – அஷோக்க அபேசிங்க

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு, அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு, அவசியமான நேரத்தில் கிடைக்கும் என, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அஷோக்க அபேசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு தனியார் பேரூந்து நிலையத்திற்கு அருகில், நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சாதாரணமாக தேர்தலொன்று வரும் போது, எம்மோடு கூட்டணியாக செயற்பட மாட்டார்கள். அவர்கள் அவர்களுடைய அடையாளத்தை வைத்துக்கொண்டு கட்சிக்கு உதவி செய்வார்கள். இது குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த போது அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் அமைச்சர் எரான் விக்ரமரத்னவுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சரவணபவன் பேச்சு நடத்தினார்கள். அந்த பேச்சுவார்த்தை வெற்றியளித்தது.

அதேபோல அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரனும், மாவை சேனாதிராஜாவும் கலந்துரையாடலில் இணைந்திருந்தனர்.
சஜித் பிரேமதாஸ, அவர்களிடமிருந்து, அவசியமான நேரத்தில், அவசியமான ஆதரவை பெற்றுக் கொள்வார்’ என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!