முல்லை, புதுக்குடியிருப்பில் 19 பேர் சமாதான நீதிவான்களாக பதவிபிரமாணம்

முல்லைத்தீவு மாவட்டத்தின், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 19 உறுப்பினர்கள், பதவிநிலை சமாதான நீதிவான்களாக, இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.


முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில், பதவிப்பிரமாணம் இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செல்லையா பிரேமகாந், உப தவிசாளர் கனகசுந்தரசுவாமி ஜனமேஜயந்த், சபை உறுப்பினர்களான தம்பிஜயா கேதினி, ஜீவரட்ணம் கிருபாலினி, சிவபாதம் குகனேசன், அருளானந்தம் தவகுமாரன், சிவலிங்கம் சுரேஷ், இலட்சுமிகாந்தன் சந்திரரூபன், சிவசுந்தரம் கணேசபிள்ளை, இராமலிங்கம் சத்தியசீலன், ஸ்ரீகுமார் நிசாந்தி, சி.சுவந்தினி, நாகமணி வன்னியசிங்கம், முத்துசாமி முகுந்தகஜன், அண்டனிப்பிள்ளை பராமதாஸ், சதாசிவம் சத்தியசுதர்சன், பெர்ணாண்டோ அருள்தாஸ், ஏரம்பு இரத்தினவடிவேல், ஆறுமுகம் ஜோன்சன் ஆகிய 19 உறுப்பினர்கள், இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!