பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிப்பு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஜ.எஸ் தீவிரவாத அமைப்பினால், ஈஸ்டர் தினத்தன்று மத வழிபாட்டிடங்கள் மற்றும் விடுதிகள் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இக்குண்டுத்தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து உண்மையினை கண்டறியும் பொருட்டு, பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.

குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவானது, பாதுகாப்பு தரப்பினர், அரசியல்வாதிகள் உட்பட பலரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், ஜனாதிபதியின் வாக்குமூலத்தினை பெற்றுக்கொள்வதற்கும்
நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே, பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிப்பதற்குரிய, ஒப்புதலை பாராளுமன்றம் வழங்கியுள்ளது.

இதனடிப்படையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிவரை ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடாத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!