காணாமல் போன 200 கோடி தொடர்பாக விளக்கம்-மகிந்த

கொழும்பு தாமரை கோபுரம் அமைக்க 2 பில்லியன் ரூபா பணம் சீன தேசிய இலக்ரேனிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனினும் இதை தவிர ALIT நிறுவனத்திற்கோ அல்லது வேறு எந்த நிறுவனம் ஒன்றிற்கோ எவ்வித பணமும் வழங்கப்படவில்லை எனவும்  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தாமரை கோபுரம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கும் விதமாகவிதமாகவே எதிர் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!