மன்னாரில் தொடரும் இ.போ.ச ஊழியர் போராட்டம்!

மன்னாரில் 3ஆவது நாளாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை தடுக்க மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கம் விசேட போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

மன்னாரில் இருந்து உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கான இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் சாலை சேவைகள் முழுமையாக மூன்றாவது நாளாகவும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் சாலை ஊழியர்களின் போராட்டத்தினால், மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனினும் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளும் வகையில் மன்னாரில் இருந்து மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சேவை பேருந்துகள் விசேட சேவையை முன்னெடுத்து வருகின்றது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!