மக்கள் விடுதலை முன்னணிக்கு ஶ்ரீ.சு.க ஆதரவு-தயாசிறி

” கூட்டணி அமைப்பது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சு தோல்வியடையும் பட்சத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாற்று நடவடிக்கையில் இறங்கும்.” – என்று அதன் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மாத்தறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘மொட்டு’ சின்னத்தை எம்மால் ஏற்கமுடியாது. கிராமமட்டத்திலான சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களின் நிலைப்பாடும் இதுவோகவே இருக்கின்றது.

எனவே, மொட்டு தவிர்ந்த ஏனைய பொதுசின்னமொன்றில் போட்டியிடுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வரவேண்டும். அப்போது கூட்டணி அமைக்கும் முயற்சியும் வெற்றிபெறும்.

சிலவேளை இருதரப்பு பேச்சுகள் தோல்வியடையும் சுதந்திரக்கட்சிக்கு சில மாற்று தேர்வுகள் உள்ளன. தனியாக போட்டியிடலாம். அவ்வாறு அல்லாவிட்டால் ஜே.வி.பியுடன் இணைந்து பரந்தபட்ட கூட்டணியை ஏற்படுத்தி தேர்தலை எதிர்கொள்ளலாம்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தனித்துவத்தை விட்டுக்கொடுப்பதற்கு நாம் தயாரில்லை.” என்றார் தயாசிறி.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!