தொடருகின்றது இ.போ.ச பணிப்பகிஷ்கரிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் நேற்று முன்தினம் ஆரம்பித்திருந்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் 3ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக மக்கள் போக்குவரத்து செய்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மாதந்த பருவச்சீட்டில் பயணிக்கும் பாடசாலை மாணவர்கள், அரச தனியார் திணைக்களங்களில் கடமையாற்றுபவர்கள், தூர இடங்களுக்குச் செல்லுபவர்கள் என பலரும் பாதிப்படைந்துள்ளனர்.

அதிகரிக்கப்பட்ட 2,500 ரூபாய் கொடுப்பனவை பெற்றுக்கொள்ளல், ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படல் உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை சுதந்திர தேசிய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!