வவுனியா தவசிக்குளத்தில் விபத்து : இருவர் படுகாயம்

வவுனியா தவசிகுளம் பகுதியில், இன்று மாலை இடம்பெற்ற விபத்தில், இருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

தவசிகுளத்தில் இருந்து, கோவில்குளம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், தவசிகுளம் வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில், வீதியின் அருகே இருந்த மதகுடன் மோதி விபத்திற்குள்ளானது.

விபத்தில், 19 மற்றும் 21 வயதுடைய, மகாறம்பைகுளம் மற்றும் கோவில்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, காயமடைந்த இருவரும், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!