ஆப்கானில் குண்டுத் தாக்குல் : 25 பேருக்கு மேல் பலி

ஆப்கானிஸ்தானில், ஜனாதிபதி உரையாற்ற இருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில், 25ற்கும் அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பர்வான் மாகாணத்தின் தலைநகரான சரிகரில், ஜனாதிபதி அஸ்ரவ் கானி உரையாற்ற இருந்த பிரச்சார கூட்டத்தை இலக்கு வைத்து, தீவிரவாதிகள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது, பொது மக்கள் அதிகளவில் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பெண்களும் குழந்தைகளும் அதிகளவில் பலியாகியுள்ளதாக, மாகாணத்தின் பிரதான மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்கொலை குண்டுத் தாக்குதலே இடம்பெற்றுள்ளதாகவும், ஜனாதிபதிக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி உரையாற்ற ஆரம்பித்த வேளையே தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!