முல்லை. பாவற்குளம் முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்

முல்லைத்தீவு நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள, பாவற்குளம் முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம், இன்று சிறப்பாக நடைபெற்றது.

ஆலய பூசகர் மு.ஞானம் தலைமையில், உற்சவம் நடத்தப்பட்டது.

1984 ஆம் ஆண்டு காலப்பகுதியில், யுத்தத்தினால் அழிவடைந்த நிலையிலும், மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நிலையில், ஓரளவு புனர்நிர்மாண வேலைகள் செய்யப்பட்டு, பண்டைய கால முறைப்படி மடப்பண்டம் எடுத்துச்செல்லப்பட்டு, கச்சை நேர்ந்து பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.  இதில், பெருமளவான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!