தாமரைக் கோபுர நிதி மோசடி தொடர்பில், ஜனாதிபதி, விசாரணைக்குழு அமைக்க வேண்டும் – துசித எம்பி

தாமரைக் கோபுரம் அமைக்கும் நிதியில், 200 கோடியை பெற்றுக் கொண்டவர்கள் யார்? இதற்கு தரகர் பணி புரிந்தவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள, ஜனாதிபதி விசாரணைக்குழு ஒன்றினை விரைவாக அமைக்க வேண்டும் என, ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துசித இந்துனில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று, கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த கோரிக்கை முன்வைத்தார்.

ஆசியாவின் உயர்ந்த கோபுரமான தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சிலர் இதனை பொதுஜன பெரமுனவின் சின்னம் என்றும் கூறுகின்றார்கள். அது பிரச்சினை அல்ல.
மொட்டு கட்சியின் சின்னமோ அல்லது கோபுரமோ திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுவல்ல பிரச்சனை.
தாமரைக் கோபுரம் புனரமைப்பு பணிக்காக வழங்கப்பட்ட 200 கோடி காணாமல் போயுள்ளதாக, நான் இன்று ஊடகங்களில் பார்த்தேன்.
அந்த செய்திகளை பார்;த்த போது தற்போதய அரசாங்கத்தின் காலத்தில் குறித்த பணம் காணாமல் போனதாகத்தான் அர்த்தப்படுகின்றது.
உண்மையில் 2012ம் ஆண்டுதான் இந்த பணம் வழங்கப்பட்டிருக்கின்றது.
அலிட் எனும் நிறுவனத்திற்குத்தான் இந்த 200 கோடி பணமும் வழங்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் இந்த பணம் வழங்கப்பட்ட நாள் முதல் அந்த நிறுவனத்தின் முகவரியும் இல்லை, அதன் காரியாலயமும் இல்லை. ஒன்றுமே இல்லாமல் போயுள்ளது.
எங்கள் அரசாங்கத்தில் ஒரு சின்ன விடயம் நடந்தவுடன், ஜனாதிபதி அவர்கள் விசாரணைக்குழுக்களை அமைப்பார்.
நீதிமன்றத்தில் வழக்குகளை தொடருவார்.
அது சரி. ஆனால் கடந்த அரசாங்கம் 800 பில்லியன்களை கொள்ளையிட்டதாக பேசுகின்றார்கள்.
அது தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கைகள் வெளிவரவில்லை.
ஆகவே 2012ம் ஆண்டில் நடைபெற்ற தாமரைக் கோபுரம் அமைக்கும் பணியில், 200 கோடி பணம் காணாமல் போனமையை வெளியே ஜனாதிபதி தெரிவித்துவிட்டார்.
இது வரவேற்கத்தக்கது.
ஆனால், இதனை எமது அரசாங்கத்தின் தலையில் போடும் விதமாகத்தான், எங்கள் மீது ஸ்ரிக்கரை ஒட்டி விடுவதற்குத்தான் முயல்வது போன்றுதான், ஊடகங்கள் செய்தியை அர்த்தப் படுத்தியிருந்தன.
2012 ம் ஆண்டு இந்த 200 கோடி பணம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
எந்த அடிப்படையில் முகவரி அற்ற, அலுவலகம் இல்லாத நிறுவனத்திற்கு இந்த பணம் வழங்கப்பட்டது?
அந்த நிறுவனத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் யார்?
இதனுடன் சம்பந்தப்பட்டவர் யார் என்பதை உடனடியாக தேடிப்பார்த்து, இதற்கு காரணமான அந்த தரகர் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு, விசாரணைக்குழு ஒன்றினை ஜனாதிபதி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுகின்றேன்.
என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!