மன்னார் மாந்தை மேற்கிற்கு, நீரின்றி வந்த யானை உயிரிழப்பு

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, பரப்புக்கடந்தான் கிராமத்தில் உள்ள குளத்திற்கு, நீர் அருந்துவதற்காக, கடந்த 12 ஆம் திகதி நோய்வாய்ப்பட்ட நிலையில் சென்ற யானை, உயிரிழந்த நிலையில் இனம்காணப்பட்டுள்ளது.


நீர் அருந்துவதற்காக, குளத்திற்கு சென்ற யானை, நீரை அருந்திய பின்னர், காட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையில், குளப்பகுதியில் காணப்பட்டுள்ளது.

உடனடியாக அப்பகுதி மக்கள், கிராம அலுவலர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

எனினும் உரிய நேரத்திற்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சமூகமளிக்கவில்லை என, மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த நிலையில், மக்களின் ஒத்துழைப்புடன், குறித்த யானை குளத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு காட்டுப்பகுதிக்குள் துரத்திவிடப்பட்டது.

எனினும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், அப்பகுதிக்கு வருகை தரவில்லை என, மக்கள் கவலை வெளியிட்டனர்.
இவ்வாறான நிலையில், நோய்வாய்ப்பட்டிருந்த யானை, கடந்த 12 ஆம் திகதி நீர் அருந்திய குளத்தில் இருந்து, சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் உயிரிழந்த நிலையில், இன்று மதியம் இனம்காணப்பட்டுள்ளது.

யானை உயிரிழந்த நிலையில், இன்று வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்து, மரணம் தொடர்பாக விசாரனைகளை மேற்கொண்டதாக, அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!