சட்டவிரோதமாக கற்றாழைச் செடிகளை எடுத்துச் செல்லமுற்பட்ட இருவர் கைது!

அனுமதிப்பத்திரம் இன்றி யாழ்பாணம் தீவகப் பகுதியிலிருந்து கற்றாழை செடிகளை கடத்திய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண விசேட குற்றத்தடுப்புப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே கற்றாளைச் செடிகளை கடத்திச் சென்றவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!