பாரளுமன்ற உறுப்பினர்களாக மூவர் இன்று பதவியேற்பு!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த ஷாந்த பண்டார, மனோஜ் சிறிசேன மற்றும் டீ.பீ. ஹேரத் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக சற்று முன்னர் பிரதி சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.


பாராளுமன்றம் இன்று மதியம் 1.00 மணிக்கு கூடிய போது இவர்கள் பிரதி சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டனர்.

சாலிந்த திஸாநாயக்கவின் மறைவின் காரணமாக வெற்றிடமாகியிருந்த குருணாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு டீ.பீ.ஹேரத் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, சந்திரசிறி கஜதீரவின் மறைவின் காரணமாக வெற்றிடமாகியிருந்த மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய சாந்த பண்டார இன்று மீண்டும் குறித்த பதவியை ஏற்று பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!