நாவற்குடா சிவசக்தி விநாயகர் அறநெறிப் பாடசாலைக்கு உதவி

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு சிவசக்தி விநாயகர் ஆலய அறநெறிப் பாடசாலைக்கு, இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் கழிவறைகள் கட்டுவதற்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

நாவற்குடா கிழக்கு சிவசக்தி விநாயகர் ஆலயத்திற்கு விஜயம் செய்த இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியனால் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் எல்லைப் பகுதியாக காணப்படும் குறித்த பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்ற போதிலும் எவரும் தமக்கு உதவ முன்வருவதில்லையென, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் ஆலயத்தில் உள்ள அறநெறி பாடசாலைக்கான கழிவறைகள் கட்டுவதற்கான உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில், சிவசக்தி விநாயகர் ஆலயத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள், அறநெறி பாடசாலை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

எல்லைப் பகுதியில் உள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அனைவரும் முன்வர வேண்டும், தமிழர்களின் பகுதியை பாதுகாக்கும் பெரும் பங்கை எல்லைப்பகுதி மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களுக்கு அரசியல்வாதிகளும் புலம்பெயர் மக்களும் ஆதரவுக்கரத்தினை வழங்க வேண்டும் என, இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்தார்.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!