முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கிலும், பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் நோக்கிலும், விளையாட்டு வீரார்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

சைன் பாம் நிறுவனத்தினரால் குறித்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

சைன் பாம் நிறுவனத்தினரின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் அ.தேவகுமாரின் ஏற்பாட்டில், வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சைன் பாம் நிறுவனத்தின் சமூக செயற்பாட்டாளர் முல்லை ஈசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முதன்மை விருந்தினராக சைன்பாம் நிறுவனத்தின் உரிமையாளர் தெ.இந்திரதாஸ், சிறப்பு விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசளார் க.ஜெனமேஜயந், கிராம சேவையாளர் கே.லக்கிதன், புதுக்குடியிருப்பு பிரதேச கால்நடை வைத்தியர் திரு.தயாபரன், அகில இலங்கை சமாதான நீதவான் எஸ்.மாதவராசா, கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஜீவதன் உள்ளிட்ட விருந்தினர்கள் அறிவொளி முன்பள்ளி மாணவர்களின் பான்ட் வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த போரால் பாதிக்கப்பட்ட வறுமைகோட்டின் கீழ் உள்ள 40 குடும்பங்களுக்கு தலா 20 கோழிக்குஞ்சுகளும், பாடசாலை மாணவர்கள் 90 பேருக்கு கற்றல் உபகரணங்களும், 08 விளையாட்டு கழகங்களுக்கு வலைபந்துகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது வள்ளிபுனம் பகுதியில் உள்ள அறிவொளி முன்பள்ளி மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை ஊக்கிவிக்கும் நோக்கில், அறிவொளி முன்பள்ளிக்கு சிறிய கட்டிடம் அமைப்பதற்கென முப்பதாயிரம் ரூபா நிதி உதவி, சைன் பாம் நிறுவனத்தின் உரிமையாளர் தெ.இந்திரதாஸினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!