முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் கொடி மற்றும் சீருடை மீட்பு

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் பொதிசெய்யப்பட்டு நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலைப்புலிகளின் கொடிகள் மற்றும் சீருடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் ஒருவர் தனது காணியை கனரக இயந்திரத்தின் உதவியுடன் துப்பரவு செய்தபோது, நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பை ஒன்று வெளியில் வந்துள்ளது.

குறித்த பையில் விடுதலைப்புலிகளின் சீருடைகள் காணப்பட்டதை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விடுதலைப்புலிகளின் இரண்டு புலிக்கொடிகள், இராணுவ சீருடைகள் இரண்டு, இரண்டு தொப்பிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதில் இராணுவ சீருடை ஒன்று சிறுவர் ஒருவரின் அளவிலும் மற்றையது பெரியவர்களின் அளவிலும் காணப்பட்டுள்ளது புலிக்கொடி ஒன்று சிறியதும் மற்றையது பெரியதுமாக காணப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!