ட்ரம்பிற்கு-கிம் ஜோங் உன் அழைப்பு

நேரில் சந்தித்து பேசுவதற்கு வடகொரிய தலைவர், அமெரிக்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கு வடகொரியா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா-தென்கொரியா இராணுவ படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன.

இதனால் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் 4-வது முறையாக சந்தித்து பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட டிரம்ப், “இந்த ஆண்டு இறுதிக்குள் ஏதேனும் ஒரு தருணத்தில் கிம் ஜாங் உன்னை சந்திப்பேன்” என குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில், டிரம்பை வடகொரியாவுக்கு வரும்படி கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் கடந்த மாத இறுதியில் கிம் ஜாங் உன், டிரம்புக்கு அனுப்பியதாக தென்கொரியா ஊடகங்கள் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த செய்தியில் “டிரம்புக்கு, கிம் ஜாங் உன் அனுப்பிய கடிதத்தில், அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக தலைநகர் பியாங்யாங்கில் டிரம்பை சந்தித்து பேச தான் விரும்புவதாக கிம் ஜாங் உன் குறிப்பிட்டு உள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த கடிதம் குறித்து வடகொரியா மற்றும் அமெரிக்கா தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!