இ.போ.ச பணி முடக்கம்-பொதுமக்கள் அவதி

சம்பள உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்துச் சபையினர் நாடு தழுவிய ரீதியில் போராட்டமொன்றினை மேற்கொண்டுவருகின்றனர்.

வடபிராந்திய போக்குவரத்துச் சபையினரின் பணி முடக்கத்தால், பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், தனியார் ஊழியர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் பருவகாலச் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டவர்கள், பெரும்பாலானவர்கள் தனியார் பேருந்துகள் மற்றும் ஏனைய போக்குவரத்து ஒழுங்களின் ஊடாக பணிகளுக்குச் செல்வதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இந்த பணிமுடக்கம் தொடர்பில் எமது செய்திப்பிரிவு, யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் காணப்பட்ட வடபிராந்திய போக்குவரத்துச் சபையினரிடம் வினவியது.

இதன்போது, பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கத்தினர் பகிரங்க மன்னிப்புக் கோரியதோடு, தமது கோரிக்கைகள் தீர்க்கப்படும் வரை தமது பணிப்புறக்கணிப்பு நீடிக்கும் என்றும் குறிப்பிட்டனர்.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!