த.தே.கூட்டமைப்புடன், பிரதமர் பேச்சுவார்த்தை!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தையொன்றை நடத்தவுள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பின்போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தும் கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்புக்கு முன்னதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!