ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலயத்தில் பல்தேவைக் கட்டடம்

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட பல்தேவைக்கட்டடம் நேற்று இரவு திறந்து வைக்கப்பட்டது.

ஸ்ரீ முருகன் ஆலய தலைவர் ஆர்.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்.
ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவ பெருவிழாவின் பூங்காவனத்திருவிழா நேற்றிரவு இடம்பெற்றது.

இத்திருவிழாவினை சிறப்பிக்கும் முகமாகவே இக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டதுடன் சமூகத்திற்காக பாடுபட்டுழைத்து ஓய்வு பெற்ற ஆசிரியை செல்வநேசம் சபாரெத்தினம் மற்றும் சமூக சேவையாளர் சிவசம்பு உள்ளிட்டர்களும் கல்வியில் சாதனை படைத்த மாணவ செல்வங்களும் இங்கு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

விசேடமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆலய நிருவாகத்தால் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!